நரபலி கொடுக்கப்பட்ட இரண்டு பெண்களின் உடல் உறுப்புகளை விற்க திட்டம்..!
கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட இரண்டு பெண்களின் உடல் உறுப்புகளையும் பெங்களூருவில் விற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் தர்மபுரியை சேர்ந்த பெண் பத்மா உட்பட இரண்டு பெண்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில் வெவ்வேறு நாடுகளில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் நரபலி கொடுக்கப்பட்ட இரண்டு பெண்களின் உடல் உறுப்புகளையும் பெங்களூருவில் விற்க திட்டமிட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
உடல் பாகங்களை பிரிட்ஜில் பாதுகாத்து வைத்திருந்தது ஏன் என போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்த நிலையில் நரபலி கொடுக்கப்பட்ட மாமிசத்தை வாங்க யார் தயாராக இருந்தார்கள் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





