--- --:--:-- --

வாழப்பாடி அருகே 8 மாத கைக்குழந்தையுடன் கிணற்றில் விழுந்த இளம்பெண்..!

5

வாழப்பாடி அருகே 8 மாத கைக்குழந்தையுடன் கிணற்றில் விழுந்த இளம்பெண் உயிரோடு மீட்கப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்.

 

இவர் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேன்மொழி. இவர்களுக்கு 8 மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்த நிலையில் தோட்டத்தில் உள்ள கிணற்றில் தேன்மொழி குழந்தையுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்ததாக தெரிகிறது.

 

தேன்மொழி அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று கிணற்றில் தேன்மொழியை மீட்டனர். ஆனால் எட்டு மாத ஆண் குழந்தை தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon