யூடியூபர் TTF மீது வழக்குப்பதிவு..!

திவேகமாக வாகனத்தை இயக்கி மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயல்பட்டதாக யூடியூபர் டிடிஎப் மீது கோவை மாநகர காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. சீனிவாசன் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தின் மூலம் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்வதை யூடியூபில் பதிவேற்றுவதை வழக்கமாக கொண்டவர்.

 

ஒரு கட்டத்தில் வேகமாக வாகனங்களை இயக்கி ஸ்பீடோமீட்டர் இல் வாகனம் செல்லும் வேகத்தை பதிவு செய்து அதனை பதிவேற்றம் செய்து வந்தார் சமீபத்தில் இவர் வடநாட்டில் மணிக்கு 200 கிலோ மீட்டருக்கு மேலான வேகத்தில் வாகனத்தை இயக்கி காவல்துறையினரின் எச்சரிக்கைக்கு ஆளாகியிருக்கிறார்.

 

கடந்த 14ஆம் தேதி மற்றொரு யூடியூபர் ஜிபி முத்துவை தனது இரு சக்கர வாகனத்தில் அமரவைத்து கோவை-பாலக்காடு சாலையில் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வந்ததாக ttf வாகனத்தை இயக்கி அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்திருந்தார். இது சர்ச்சையான நிலையில் கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.