--- --:--:-- --

பாம்பை வேட்டையாடிய சிலந்தி..!

6

ஒரு பாம்பை சிலந்தி வேட்டையாடி பார்த்தது உண்டா என்றால் இல்லை என்று தான் அனைவரும் சொல்வார்கள். இதற்கிடையில் இணையத்தில் பல பழைய வீடியோ ஒன்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

டெக்சாசில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் இந்த வீடியோவில் சிலந்தி ஒன்று வலை பிண்ணியுள்ளது. ஆச்சரியம் என்னவென்றால் ஒரு பாம்பு சிக்கியுள்ளது. இரண்டடி அளவில் உள்ள அந்த பாம்பை சிலந்தி மேலும் தன் வலையில் இறுக்கமாக கட்டுப்பாட்டில் வைத்துள்ளது போல் தெரிகிறது.

 

சிலந்தி வலை மிகவும் பலவீனமாக தெரிந்தாலும் பாம்பினால் அதிலிருந்து வெளியேற முடியவில்லை. சிலந்திகளை விட பாம்புகள் மிகவும் ஆபத்தானவை என்று மக்கள் கருதுகின்றனர். இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ பலரின் பார்வையை மாற்றி உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon