--- --:--:-- --

மழைநீர் வடிகால்வாய் குழியில் விழுந்த கம்ப்யூட்டர் எஞ்சினியர்..!

8

சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில் மழைநீர் வடிகால்வாய் குழியில் விழுந்த கம்ப்யூட்டர் எஞ்சினியர் கம்பி குத்தியதில் படுகாயமடைந்தார். மெயின் ரோட்டில் கால்வாய் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.

 

அந்த பகுதியை சேர்ந்த பொறியாளர் வாசுதேவன் என்பவர் வீட்டின் வாசலில் மழைநீர் வடிகால்வாய் உடைக்கப்பட்டு புதிய வடிநீர் கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

 

மழைநீர் வடிகால்வாய் மூடப்படாமல் திறந்த வெளியில் போடப்பட்டிருந்த நிலையில் வாசுதேவன் தனது இரு சக்கர வாகனத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon