ஸ்கவுட்டின் மாநில தலைவரானார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி..!

ள்ளி மாணவர்களுக்கு போதிய நீட் பயிற்சி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர் சாரண, சாரணியர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்று சாரண சாரணியர் இயக்க தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மதுவிலக்கு பெறுவதற்கு சட்ட போராட்டம் நடைபெற்று வருவதாகவும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை நீட் தேர்வுக்கான பயிற்சி சரியான முறையில் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.