ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய இளைஞர்..!
சென்னை தேனாம்பேட்டையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய இளைஞர் ஒருவரை கைது செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
சாலையில் வளைந்து நெளிந்து இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞரின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தபட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





