--- --:--:-- --

காதலியுடன் ஓடிய மாப்பிள்ளை..! திகைத்த மணப்பெண்..!

6

திரைப்பட பாணியில் திருமணத்தன்று காதலியுடன் மாப்பிள்ளை தப்பி ஓடிய நிலையில் மணப்பெண் செய்வதறியாது மண உடையில் கலங்கி நின்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்போரூர் அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமாருக்கும் அதே ஊரை சேர்ந்த இளம் பெண்ணுக்கும் பெரியோர் சம்மதத்தோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

 

இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் காலை மண மேடையில் மணமகள் தயாராக இருநதார். சதீஷ்குமார் காதலியுடன் தப்பியோடியுள்ளார். இதனால் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். சதீஷ்குமார் வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்ததை மாப்பிள்ளை வீட்டார் திட்டமிட்டு மறைத்து வைத்ததாக காவல்நிலையத்தில் பெண் வீட்டார் புகார் கொடுத்துள்ளனர்.

 

40 சவரன் தங்க நகை, ஏசி, பீரோ, கட்டில் என்று எல்லாம் வரதட்சணையாக கொடுத்து ஏமாற்றிவிட்டதாக மணமகள் வீட்டார் புகார் அளித்துள்ளனர். திருமண மண்டபத்தில் காவல்துறையினர் இரு வீட்டாரையும் சமாதானம் செய்து வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon