விநாயகர் சிலை ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு..!

ண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தில் நடனமாடிய பொழுது மின்சாரம் தாக்கி 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ஊர்வலத்திற்காக கொண்டுவரப்பட்ட ஸ்பீக்கரில் வயர் சேதமடைந்ததால் மின்கசிவு வெளியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.