--- --:--:-- --

இந்திய கிரிக்கெட் வீரருடன் டேட்டிங்கில் தனுஷ் பட நடிகை !

12

பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகர் சைஃப் அலி கான் அவரின் மகள் சாரா அலி கான் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கேதர்நாத் திரைப்படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் தற்போது பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகையாக சாரா அலி கான் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக மாறியிருக்கிறார்.

 

தனுஷ் நடித்த பாலிவுட் திரைப்படமான அத்ராகி ரே திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக தனுஷ் தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் சாரா அலி கான் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுப்மன் கில்லுடன் ஹோட்டலில் உணவருந்தும் போது வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். இதனால் தற்போது அவர்கள் இருவரும் டேட்டிங்கில் இருப்பதாக இணையதள வாசிகள் பதிவிட தொடங்கியுள்ளனர்.

 

இதற்கு முன் சாரா அலி கான் ஹிந்தி நடிகர் கார்த்திக் ஆர்யனை காதலித்து வந்தார், அவர்கள் இருவரும் கடந்த 2020 ஆம் ஆண்டு பிரிந்து விட்டதாக தகவல் பரவின. மேலும் சுப்மன் கில் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கரை காதலிப்பதாகவும் சொல்லப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon