--- --:--:-- --

பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

8

புதுக்கோட்டையில் பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. கந்தர்வகோட்டை பகுதியை சேர்ந்த ஜெனிதா என்ற மாணவி பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி தேர்வில் தோல்வியுற்ற நிலையில் மீண்டும் ஒரு துணை தேர்வு எழுதியுள்ளார். ஆனால் அதில் மீண்டும் தோல்வியடைந்ததால் மனவேதனையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே மாணவி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon