இறந்து விட்டதாக கூறிய குழந்தையின் கண்கள் அசைந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி..!
மெக்சிகோவில் இறந்து விட்டதாக கூறிய குழந்தையின் கண்கள் அசைந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 3 வயது குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வயிற்றுக்கோளாறு, காய்ச்சலுக்காக மருத்துவரை அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தையின் இறுதி சடங்கை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த நிலையில் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டு இருந்த குழந்தையின் கண்கள் அசைந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையுடன் மருத்துவமனைகளுக்கு செல்ல அவருக்கு மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மீண்டும் சிறுமி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவர்கள் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்துவிட்டதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





