உதகையில் சிறுத்தை தாக்கி வடமாநில சிறுமி உயிரிழப்பு..!
நீலகிரி மாவட்டம் உதகையில் சிறுத்தை தாக்கி வடமாநில சிறுமி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
அந்த பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் நடமாடுவதாக மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் அந்த பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிறுத்தை உலா வரும் காட்சிகள் பதிவாகி சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





