--- --:--:-- --

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்யும்..!

8

சென்னையில் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் கனமழை பெய்தது சாலையோரம் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். தமிழகத்தின் மேற்கு பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் நள்ளிரவில் கனமழை பெய்தது.

 

கோயம்பேடு மாநகர மதுரவாயில் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலையில் இரு ஓரங்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon