தந்தை வாங்கிய கடனைக் கேட்டு மிரட்டியதால் மகன் தூக்கிட்டுத் தற்கொலை..!
மேட்டூர் அருகே தந்தை வாங்கிய கடனைக் கேட்டு மிரட்டியதால் கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் நிர்மல்ராஜ். தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
இவரது தந்தையான ஆனந்தன் அதே பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவரிடம் 40,000 ரூபாய் கடனாக வாங்கியிருந்தார். இதில் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை மட்டும் வட்டியுடன் திருப்பி செலுத்தியிருந்தார். மீதமுள்ள பணத்தை கேட்டு சுதாகர் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் ஆனந்தன் வீட்டிற்கு வந்த சுதாகர் பணத்தைத் திருப்பித் தராவிட்டால் ஆட்டை பிடித்து சென்று விடுவதாக கூறியுள்ளார். தான் ஆசையாக வளர்த்துவரும் ஆட்டை எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து நிர்மல்ராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கடன் தரவில்லை என்றால் அடுத்த முறை ஆட்டை பிடித்து செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த நிர்மலராஜ் தாயாரின் சேலையை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





