திருடப்பட்ட 108 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைப்பு..!
திருப்பூர் மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 4 மாதங்களில் 108 செல்போன்கள் திருடப்பட்டதாகவும் காணாமல் போனதாகவும் அதை கண்டுபிடித்து தரக்கோரி மாநகர காவல் நிலையங்களில் பொதுமக்கள் புகார் அளித்திருந்த நிலையில்
அந்தப் புகார்களின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

நீண்ட நாட்களாக கண்டுபிடிக்கப்படாமல் இருந்த செல்போன்களை கண்டுபிடிக்க சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சுவர்ணவல்லி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 108 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. அந்த செல்போன்களை இன்று உரியவர்களிடம் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் ஒப்படைத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




