குடிபோதையில் நண்பரை கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்த நபர் கைது ..!
சென்னை கோடம்பாக்கத்தில் குடிபோதையில் நண்பரை கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டார். கோடம்பாக்கத்தை சேர்ந்த சரவணன் மற்றும் மாதவன் ஆகியோர் அந்த பகுதியில் உள்ள டைலர் கடையில் டெய் லராக பணியாற்றி வந்துள்ளனர்.
மாதவன் ஏற்றி சரவணனிடம் துணியை ஒழுங்காக தைக்குமாறு கூறியதை அடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த சரவணன் ஊசியை எடுத்து மாதவனை குத்தியதால் பதிலுக்கு மாதவன் கத்தரிக்கோலை எடுத்து சரவணனை குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





