மரத்தின் கிளை விழுந்ததில் ஆயுதப்படை காவலர் காயம்..!
கேகே நகரில் மரத்தின் கிளை திடீரென சரிந்து விழுந்ததில் ஆயுதப்படை காவலர் காயங்களுடன் உயிர் தப்பினார். கேகே நகரில் பிரதான சாலையில் மாலை 4 மணி அளவில் மிகப்பெரிய மரத்தின் கிளை திடீரென சாய்ந்துள்ளது. அப்பொழுது அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஆயுதப்படை காவலர் சேகரின் வாகனம் கிளையில் சிக்கியது.
சாய்ந்த மரத்தில் சிக்கித்தவித்த காவலரை பொதுமக்களும் போக்குவரத்து காவலர்கள் மீட்டனர். காயங்களோடு தப்பிய காவலர் அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அந்த சாலையில் மரம் விழுந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நிகழ்விடத்திற்கு வந்த நகராட்சி பணியாளர்கள் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினர்.
கேகே நகர், அசோக் நகர், கோடம்பாக்கம் பகுதிகளில் கடந்த மாதம் மட்டும் நான்கு மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் சாலையோர மரங்களை பராமரிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





