கண்டெய்னர் லாரி ஒன்று திடீரென்று தீப்பற்றி எரிந்து நாசம்..!
சென்னை எர்ணாவூர் பகுதியில் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று திடீரென்று தீப்பற்றி எரிந்தது. லாரியில் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.
அப்பொழுது திடீரென்று தீப்பற்றி எரிந்த நிலையில் ஓட்டுநர்கள் உடனடியாக கீழே இறங்கி சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





