--- --:--:-- --

வீரமரணமடைந்த லட்சுமணன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் ..!

2

வீரமரணமடைந்த லட்சுமணன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அரசு சார்பில் நிதி உதவியும் அறிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த தமிழ் நாட்டு வீரர் லக்ஷ்மணனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

ஆளுநர் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில் தேசத்தின் இறையாண்மை மற்றும் மேம்பாட்டிற்காக லட்சுமணன் ஆகியோர் ஆற்றிய கடமை மற்றும் உயர்ந்த தியாகத்திற்கு நாடு அவருக்கு கடன் பட்டிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

முதலமைச்சர் மு க ஸ்டாலின் விடுத்திருக்கும் இரங்கல் செய்தியில் லட்சுமணன் உயிரிழந்த செய்தி அறிந்து துயரமும் வேதனையும் அடைந்ததாக கூறியுள்ளார். ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அவரது குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon