--- --:--:-- --

மிகப்பெரிய அலையில் சிக்கி தூக்கி வீசிய பைபர் படகு..!

4

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மிகப்பெரிய அலையில் சிக்கி பைபர் படகு தூக்கி வீசப்பட்டது. நல்வாய்ப்பாக படகில் இருந்த மீனவர்கள் தப்பினர். இந்த துறைமுகத்தில் முகப்பு வாரம் சரியில்லாத காரணத்தால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

 

இதுவரை 14 மீனவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் வழக்கம் போல பைபர் படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மிகப்பெரிய அலையில் சிக்கி படகில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதை கண்ட சக மீனவர்கள் அவரை பத்திரமாக மீட்டனர். உயிரிழப்பை தடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon