--- --:--:-- --

நானே வருவேன் படத்தில் தனுஷுடன் நடித்துள்ள பிக் பாஸ் பிரபலம்..!

13

தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் நானே வருவேன். இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். பல நாட்கள் கழித்து இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.ஏற்கனவே இப்படத்தின் போஸ்டர்கள் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக இப்படத்தின் ட்ரைலரை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

 

இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என்பது போல் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பிக் பாஸ் பிரபலம் ஆஜித் நடித்துள்ளார்.ஆம், நானே படத்தின் டப்பிங் முடிந்தது என்று கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் செல்வராகவனுடன் இருக்கும் புகைப்படத்தை ஆஜித், பதிவு செய்துள்ளார்.

 

இவருடைய இந்த பதிவு தற்போது தனுஷ், செல்வராகவன் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon