மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது..!
கடலூர் அருகே பண்ருட்டியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் பொன்மாணிக்கவேல். இவர் அதே பகுதியில் உள்ள மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
இதில் அதிர்ச்சி அடைந்த பள்ளி மாணவி தனது குடும்பத்தாருடன் தெரிவித்தார். அதன்பிறகு மாணவியின் தந்தை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





