கள்ளக்குறிச்சி மாணவி தொடர்பான சிசிடிவி வெளியானதால் பரபரப்பு..!
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி மரணம் அடைந்து இருக்கும் நிகழ்வு தொடர்பாக சிபிசிஐடி காவல்துறை விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தற்பொழுது மற்றுமொரு சிசிடிவி காட்சி பதிவு வெளியாகியுள்ளது.
திடீரென குறிப்பிட்ட காட்சிப் பதிவுகள் மட்டும் வெளியாவதற்கான காரணம் குறித்த கேள்விகள் எழுகின்றன. தனியார் பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவி கடந்த மாதம் 13ஆம் தேதி சந்தேகத்திற்கிடமான வகையில் மரணமடைந்தார்.
மாணவியின் தாயார் தொடர்ந்து போராடி வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 17ஆம் தேதி பள்ளியின் முன் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறி பெரும் சேதங்களை விளைவித்தது, இதனை தொடர்ந்து மாணவி மரணம் குறித்து சிபிசிஐடி காவல் துறையும் கலவரம் குறித்து சிறப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில் மாணவியின் மரணம் குறித்த பல்வேறு முகங்களும் பரப்பப்படும் நிலையில் கடந்த மாதம் 20 ஆம் தேதி சிசிடிவி காட்சிகள் வெளியாகின. அதற்கு முதல் நாள் இரவு செல்வது போன்ற காட்சிகள் குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறை தரப்பில் எந்த கருத்துக்களும் சொல்லப்படாத நிலையில் அந்த காட்சிகள் குறித்து யூகங்களும் கருத்துக்களும் பரவி வந்தன.
இந்தநிலையில் மாணவியை தற்பொழுது 4 பேர் தூக்கி வருவது போன்று சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





