--- --:--:-- --

குற்றாலத்தில் வெள்ளத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு..!

10

தென்காசி மாவட்டம் குற்றாலம் உதகை அறிவியல் நேற்று இருவர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு அருவிகளில் நீராடுவதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

குற்றாலம் மெயின் அருவியில் நேற்று மாலை 6 மணியளவில் கனமழை பெய்த காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதை அறியாமல் குளித்துக் கொண்டிருந்த 5 பேர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். ஆனால் பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலர்கள் ஒருவரை மீட்ட நிலையில் மற்ற இரண்டு பேர் தடுப்புகளை பிடித்து வெள்ளத்தில் இருந்து தப்பினார்.

 

இரண்டு பெண்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பாறைகளில் முட்டி பலத்த காயங்களுடன் உயிர் இழந்தனர். இதனையடுத்து இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

 

இதனால் தர்ப்பணம் செய்ய வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனிடைய ஆற்றில் வேறு யாரும் சிக்கியுள்ளனரா என தீயணைப்புத்துறை உதவியுடன் காவல்துறையினர் வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon