கள்ளக்குறிச்சி கலவர விவகாரத்தில் மேலும் 5 பேர் கைது..!
கள்ளக்குறிச்சி கலவர விவகாரத்தில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே பள்ளி மாணவன் இறப்பு விவகாரம் தொடர்பாக பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியைகளிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
கள்ளக்குறிச்சி அருகே கனியாமுரில் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் கடந்த 17ஆம் தேதி வன்முறை வெடித்ததில் தொடர்புள்ளதாக கூறி அருண்குமார், கமல்ராஜ், ஸ்ரீதர் சத்தியமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே மாணவி இறப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகிகள் 3 பேர் மற்றும் ஆசிரியைகள் இருவரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அவருக்கு பாடம் நடத்திய ஆசிரியர் யார் யார்? மாணவி இறந்ததாக கூறப்படும் 17-ஆம் தேதிக்கு முந்தைய நாள் பள்ளியில் என்ன நடந்தது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை காவல்துறையினர் கேட்டதாக தெரிகிறது.
இந்த சூழலில் மாணவியை பள்ளியில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் ரங்கசாமி உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
முன்னதாக அந்த மாணவியின் சொந்த ஊரான பெரியநெசலூர் அவரது பெற்றோர், சகோதரன் மற்றும் உறவினர்களிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணையில் காவல்துறையினர் சில தவறுகளை செய்து இருப்பது தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




