கல்விக்கட்டணம் செலுத்த முடியாததால் மாணவி தற்கொலை..!
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கல்விக்கட்டணம் செலுத்த பெற்றோர் சிரமப்படுவதால் மனவேதனையில் முதலாமாண்டு கல்லூரி மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது மரணத்தில் மர்மம் இருக்கக் கூடாது என்பதற்காகவே இந்த கடிதத்தை எழுதி வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விலை மதிப்பற்ற உயிரை இழந்துவிடக்கூடாது தற்கொலை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு அல்ல என அனைவரும் தெரிவித்து வருகின்றனர். போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




