அந்த சீனில் உடை அணிந்து தான் இருந்தேன் எனக்கூறி முற்றுப்புள்ளி வைத்த பிரிகிடா..!
பவி டீச்சர் ஆக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த பிரிகிடா சமீபத்தில் ரிலீஸ் ஆன இரவின் நிழல் படத்தில் நடித்து இருந்தார்.பார்த்திபன் இயக்கி நடித்த அந்த படம் உலகத்தின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படம் என விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.
நல்ல விமர்சனங்களை பெற்று வரும் இரவின் நிழல் படத்தில் பிரிகிடா ஆடையில்லாமல் இருப்பது போல ஒரு காட்சியில் நடித்து இருக்கிறார்.அந்த கடைசியில் நடிப்பதற்கு பயந்தேன், வீட்டில் பெற்றோர் அனுமதி வாங்கவே ரொம்ப கஷ்டமாக இருந்தது என பிரிகிடா முன்பு பேட்டிகளில் கூறினார்.
இந்நிலையில் தற்போது பிரிகிடா அளித்து இருக்கும் விளக்கத்தில், “அது நிர்வாண காட்சி தான், ஆனால் நான் உடை அணிந்து கொண்டு தான் இருந்தேன்” என கூறி இருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




