அதிக வெப்பத்தால் உருகிய ரயில்வே சிக்னல்..!
இங்கிலாந்தில் வரலாறு காணாத வெப்பத்தால் ரயில்வே சிக்னல் உருகியது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இங்கிலாந்தில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் தேசிய ரயில்வே வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில் வெயிலினால் ரயில்வே சிக்னல் உருகி இருப்பதாக வெளியிடப்பட்டுள்ளன. மேலும் மக்கள் தங்கள் ரயில் பயணிகளை எச்சரிக்கையுடன் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




