பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கன மழை..!
திருச்சி மாநகரின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கன மழை கொட்டித் தீர்த்தது. ஸ்ரீரங்கம் திருவானைக் காவல் விமான நிலையம் பாலக்கரை, கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது. கொத்தமங்கலம், வடகாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது.
பலத்த காற்று வீசியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




