--- --:--:-- --

திருமுருகன்பூண்டி 23 வது வார்டு நெசவாளர் காலனியில் பலத்த சூறை காற்று வீசியதில் 4 இடங்களில் மின்வயர்கள் அறுந்து விழுந்ததால் பரபரப்பு..!

4.1

திருமுருகன்பூண்டி 23 வது வார்டு நெசவாளர் காலனியில் பலத்த சூறை காற்று வீசியதில் 4 இடங்களில் மின்வயர்கள் அறுந்து விழுந்ததால் மின்தடை மக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர்சேதம் தவிக்கின்றனர்.  திருப்பூர், திருமுருகன்பூண்டி நகராட்சி 23 வது வார்டில் காமாட்சியம்மன் நெசவாளர் காலனி உள்ளது. இங்கு 350 க்கு மேற்பட்ட வீடுகளில் 1000 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் அப்பகுதியில் பலத்த காற்று சூறைகாற்று வீசியது இதனால் அப்பகுதியில் மூன்று இடங்களில் மின்கம்பத்தில் இருந்த மின்வயர்கள் பலத்த சத்தத்துடன் அறுந்து கீழே விழுந்தன. முதலில் நெசவாளர் காலனி விரிவாக்க பகுதியில் உள்ள முருகன் மளிகை கடை முன்பு உள்ள மின் வயர் அறுந்துவிழுந்தது.

 

பின்னர் 8 வது வீதியில்  உள்ள முருகன் மளிகை கடை முன்பும், தொடர்ந்து  கல்யாணி வீட்டுக்கு முன்பும் உள்ள மின்கம்பிகள் அறுந்து விழுந்தனர். நல்லவேளையாக அந்த நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் 23 வது வார்டு கவுன்சிலர் பூங்கோதை ராமச்சந்திரன், திருமுருகன்பூண்டி மின்வாரிய மின் பொறியாளர் செந்தில்குமாருக்கு தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து போர்மேன் ஆறுமுகம் தலைமையில் மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ட்ரான்ஸ்பார்மரில் மின்தடை ஏற்படுத்தினர். பின்னர் ஊழியர்கள் துணையுடன் ஒரு மணிநேரம் அறுந்து விழுந்து கம்பிகளை மாற்றி புதிய மின்வயர்களை மாட்டி சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் இரண்டு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

 

இதேபோல் நேற்றுமுன்தினமும் மாலை 4 மணிக்கு வீசிய பலத்த காற்றில் நெசவாளர் காலனி விரிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு மின்கம்பத்தில் இருந்த இரண்டு மின் வயர்கள் பலத்த சத்தத்துடன் அறுந்து கீழே விழுந்தன. அப்பொழுதுதான் அங்குள்ள வீடுகளில் பெண்கள் வீட்டிற்கு முன்பு உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

 

சிறிது நேரத்தில் வீட்டிற்கு சென்றபோது மின்கம்பி விழுந்ததால் உயிர் சேதமோ தீ விபத்தோ  எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது : கடந்த 27 வருடத்திற்கு முன்பு போடப்பட்ட வயர்கள் தற்போது சேதமாகி பழுதடைந்து உ;ள்ளதால் உடனடியாக இப்பகுதி முழுவதும் புதிய மின்வயர்ககளை மாற்றி உயிர் சேதம் ஏற்படாமல் இருக்க மின்வாரியம் முன் வர வேண்டும் என்று கூறினார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon