--- --:--:-- --

ஓ.பன்னீர் செல்வம் உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்..!

5

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

அவருக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே அதிமுக ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஓ பன்னீர்செல்வம் விரைந்து நலம்பெற முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon