--- --:--:-- --

நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை..!

10

அரியலூரில் நீட் தேர்வு பயத்தால் மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் ரயில்வே ஸ்டேஷன் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் நடராஜன் – உமா தம்பதியினருக்கு நிஷாந்தி என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர்.

 

கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் நிலையில் நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டுகளில் தேர்வுக்கு தயாராகி வந்த அவர் நீட் தேர்வு பயத்தால் தனது வீட்டின் சமையல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

தகவலறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு முன் மாணவி எழுதிய கடிதத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon