தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு..!
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் தெற்கு கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




