அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு..15 ஆம் தேதி விசாரணை..!
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் வரும் 15ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்களும் வன்முறைகளும் வெடித்தன. இதனைத் திரும்பப் பெற மத்திய அரசு உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த நிலையில் எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை வரும் 15-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




