யானையை துரத்துவதாக பெண் யூடியூபர் மீது வழக்கு பதிவு ..!
கேரளாவில் வனத்திற்குள் அத்துமீறி சென்று காட்டு யானையை துரத்துவதாக பெண் யூடியூபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்திற்குட்பட்ட மாமரத்தின் அருகே உள்ள அடர்ந்த வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து காட்டு யானையை துரத்திய பிரபல பெண் யூடியூபர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் மாநில விமானத்தில் பொருத்தப்பட்ட கேமரா மூலம் வீடியோ பதிவு செய்ததாகவும் புகார்கள் வந்த நிலையில் வனத்துறையினர் மீது வழக்கு பதிவு செய்தனர். கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கும் வனப்பகுதிக்குள் சென்று வீடியோ பதிவு செய்து அதை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வந்த நிலையில் யூடியூபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




