பள்ளி சீருடையில் புகைபிடித்தலில் ஈடுபட்ட மாணவர்கள்..!
கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே பள்ளி சிறுவர்கள் சீருடையில் புகைபிடித்தலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு புகையிலை, குட்கா போன்றவற்றை விற்பனை செய்யக்கூடாது என சட்டம் சொல்கிறது.
ஆனால் சீருடைகளில் மாணவர்கள் புகை பிடித்தல் புகை பிடிப்பது பெற்றோர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வருவாயை மட்டும் கருத்தில் கொள்ளாமல் கடை உரிமையாளர்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




