--- --:--:-- --

மனைவியை கல்லால் அடித்து கொடூரமாய் கொலை செய்த கணவன்..!

6

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சாலை புதூரில் வசிக்கும் கார்த்திகேயன் என்பவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் சாலைபுதூர் மேம்பாலம் அருகே வேறு ஒரு நபருடன் காயத்ரி பேசிக்கொண்டிருந்ததை கார்த்திகேயன் பார்த்துள்ளார். அப்பொழுது வாக்குவாதத்தில் ஈடுபட்ட கார்த்திகேயன் ஆத்திரம் அடைந்து காயத்ரியை கல்லால் தலையில் தாக்கியுள்ளார்.

 

இதில் படுகாயமடைந்த காயத்ரியை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon