--- --:--:-- --

மகாராஷ்டிராவில் 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!

6

மகாராஷ்டிராவில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை காரணமாக ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. மும்பையில் பெய்த கனமழையால் நவி மும்பையில் உள்ள சுரங்கப்பாதையில் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

 

இதேபோன்று பல்வேறு பகுதிகளில் கன மழையால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதற்கிடையே மும்பை ராய்காட் ரத்தனகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு ஏற்ற தேசிய பேரிடர் மீட்பு படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon