விமானிக்கு வந்த எச்சரிக்கையால் பாகிஸ்தானில் திடீரென தரையிறங்கிய இந்திய விமானம்..!
டெல்லியில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் தரை இறக்கப்பட்டது. டெல்லியில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் தரை இறக்கப்பட்டது.
எச்சரிக்கை விடுக்கும் இன்டிகேட்டர் செயலிழப்பு காரணமாக விமானம் தரையிறக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர் என்றும் அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்றும் மாற்று விமானம் மூலம் துபாய் அழைத்து செல்லப்படுவார்கள் எனவும் ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது.
விமானத்தில் இடதுபக்க எரிபொருள் தாங்கியில் எரிபொருள் குறைய தொடங்கியதை விமானிகள் கண்டறிந்ததாக இந்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து விமானம் எச்சரிக்கை நடவடிக்கையாக பாகிஸ்தான் தரையிறக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





