--- --:--:-- --

பனைமரம் விழுந்து ஒரு வயது குழந்தை பலி..!

3

தூத்துக்குடியில் வீசிய பலத்த சூறைக்காற்றால் பனைமரம் முறிந்து விழுந்து ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தூத்துக்குடி கேவிகே நகர் பகுதியை சேர்ந்த இசக்கி என்பவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

 

இவருடைய ஒரு வயது குழந்தை முத்து பவானி. நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வெளியே குழந்தை ராஜேஸ்வரிக்கு உணவு ஊட்டி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டின் அருகே நின்ற உயரமான பனைமரம் காற்றின் வேகத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அங்கிருந்து குழந்தையின் மீது விழுந்து நசுங்கி உள்ளது.

 

இதில் பலத்த காயமடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு குழந்தை முத்து பவானிக்கு ஒரு வயது பிறந்த நாள் கொண்டாடிய நிலையில் பனை மரம் முறிந்து விழுந்து பரிதாபமாக பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon