மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சி..!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உணவகத்தில் வழங்கப்பட்ட பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததாக கூறி ஊழியரிடம் வாடிக்கையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆரணியில் பைவ் ஸ்டார் பிரியாணி என்ற பெயரில் செயல்பட்டு வரும் உணவகத்திற்கு வந்த மூர்த்தி மற்றும் அவரது மனைவி மட்டன் பிரியாணி வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அதில் கரப்பான் பூச்சி இருந்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த நிர்வாகம் தான் வழங்கிய உணவில் கரப்பான்பூச்சி இல்லையெனவும் பொய் குற்றச்சாட்டு கூறிய மூர்த்தி மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




