தகுதியான ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்..!
கல்வி பெறும் உரிமை சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகளின்படி தகுதியான ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒருவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு முறை கேட்டில் ஆசிரியர் பணிக்காக எட்டு ஆண்டுகள் காத்திருந்த நிலையில் பள்ளி நிர்வாக குழு மூலம் ஆசிரியர் நியமனம் நடைபெறுவது முரணானது எனக் குறிப்பிட்டிருந்தார்.
அப்பொழுது தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை தற்காலிக ஆசிரியராக நியமிக்கப் போவதாக தமிழக அரசு விளக்கம் அளித்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று உரிய தகுதிகளோடு வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.
பட்டப்படிப்பு முடித்தவர்கள் கல்வித் திட்டத்தில் பணியாற்றிய விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்கக் கூடாது எனவும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





