--- --:--:-- --

கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!

2

கர்நாடக கடலோர மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

 

இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. உடுப்பி, உத்தரகாண்ட் பகுதிகள் கனமழையால் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

 

தேசிய நெடுஞ்சாலை மங்களூரு நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கி போக்குவரத்து ஸ்தம்பித்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

 

தொடர்மழை காரணமாக ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழை காரணமாக தட்சிண கன்னடா மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon