பள்ளிகளில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம்..!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளில் மீண்டும் முககவசம் கட்டாயம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருக்கிறது. நடப்பு கல்வியாண்டில் கடந்த 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் அனைத்து வகை பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா காரணமாக மாணவர்கள் அதிகம் பயிலும் கல்வி நிலையங்கள் மூலமாக தொற்று பரவ வாய்ப்புள்ளதாகவும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனால் பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதையும் தடுப்பூசி செலுத்தி இருப்பதையும் தனிமனித கொள்கையை பின்பற்றுவதையம், அடிக்கடி கைகளை சுத்தம் செய்து கொள்வதையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளிவாயல்களில் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், உடல்வெப்ப நிலை அதிகமானவர்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




