மன நலம் பாதிக்கப்பட்ட தாய் மற்றும் 6 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்..!
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் 6 வயது சிறுமியையும், மனநலம் பாதித்த தாயையும் காரில் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த 5 கொடியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஜூன் 25ஆம் தேதி தாயும் மகளும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இருவரும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டது மருத்துவ பரிசோதனை உறுதி செய்தது. மனநலம் பாதிக்கப்பட்டதால் தாயார் வாக்குமூலம் தர இயலவில்லை.
காவல்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்து 150 பேரிடம் விசாரணை நடத்தி குற்றம் செய்தவர்களை சுற்றிவளைத்தனர். அவர்கள் பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





