--- --:--:-- --

1,900 நிர்வாண படங்கள், 400 ஆபாச வீடியோக்கள் வைத்திருந்த காசி..!

5

1900 நிர்வாணப்படங்கள், 400 ஆபாச வீடியோக்கள் ஆகியவை லேப்டாப் மற்றும் செல்போனில் இருந்தது அதிர்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டுள்ள உயர்நீதிமன்றம் நாகர்கோவில் காதல் மன்னன் காசியின் தந்தைக்கு பிணை வழங்க மறுத்து விட்டது.

 

ஆசை வார்த்தைகளை கூறி தனது கட்டழகை காண்பித்தும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மீடியாக்கள் மூலமாக தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 120 க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி பணமோசடி மற்றும் ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டிய வழக்கில் நாகர்கோவிலை சேர்ந்த காசி என்பவர் 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

 

விசாரணையில் மாணவிகள் உட்பட ஏராளமான இளம் பெண்களை காதலிப்பதாக கூறி இவர் பாலியல் உறவு கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டம் பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் கந்துவட்டி சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவை சிபிசிஐடி காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

இந்நிலையில் காசியின் செல்போன் மற்றும் லேப்டாப்பில் இருந்து ஆபாச படங்களை காசியின் தந்தை தங்கபாண்டியன் அளித்ததை சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்தனர். இதனால் தடயங்களை அழித்து குற்றவாளிக்கு உதவியதாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

இந்த நிலையில் தன்னை பிணையில் விடுதலை செய்ய கோரி காசியின் தந்தை தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது காசி லேப்டாப் மற்றும் செல்போன்களில் 1900 நிர்வாண புகைப்படங்களை, 400 ஆபாச வீடியோக்கள் இருந்ததாகவும் அவரால் 120 பெண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் சிலர் மட்டுமே சாட்சியம் அளிக்க முன்வந்துள்ளதாகவும் இன்னும் பலரை விசாரணை செய்ய வேண்டியிருப்பதாகவும் சிபிசிஐடி தெரிவித்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon