--- --:--:-- --

கதறி அழுத பிடிபட்ட திருடன்… கேக் வெட்டி அசத்திய உரிமையாளர்கள்..!

10

திருடனுக்கு பிறந்த நாள் கொண்டாடிய உரிமையாளர் வீடியோ ஒன்று மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. டெல்லி குடியிருப்பு பகுதியில் 3 திருடர்கள் வந்துள்ளனர். அந்த நேரம் வீட்டின் உரிமையாளர்கள் முழித்துக்கொள்ள 2 திருடர்கள் தப்பி ஓடிவிட்டனர். ஒருவன் மட்டும் மாட்டிக் கொண்டான்.

 

மாட்டிக்கொண்ட அவன் வீட்டின் உரிமையாளரிடம் இன்று எனக்கு பிறந்தநாள். இதுவே எனது முதல் திருட்டு நான் அவர்களை காட்டிலும் இளையவன் என கதறி கூறியுள்ளான். இதையடுத்து மனமுடைந்த வீட்டின் உரிமையாளர்கள் கேக் ஒன்றை ஆர்டர் செய்து உள்ளனர். அதில் ஹாப்பி பர்த்டே என இந்தியில் எழுதப்பட்டுள்ளது.

 

வைரலாகி வரும் இந்த வீடியோவில் கேக் வெட்ட வைத்து அவனுக்கு ஊட்டி விடுகிறார். வீட்டின் உரிமையாளர் பர்த்டே கொண்டாடிவிட்டு காவல்துறையிடம் அவன் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon