--- --:--:-- --

நடிகர் சூர்யா ஆஸ்கார் குழுவில் தேர்வானது குறித்து தமிழக முதல்வரே வெளியிட்ட பதிவு !

14

மிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் சூர்யா, தற்போது இயக்குநர் பாலா இயக்கத்தில் அவரின் 41 திரைப்படமாக உருவாகி வரும் சூர்யா 41 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

 

இதனிடையே இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சூரரை போற்று, ஜெய் பீம் உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய ஆஸ்கார் விருது பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

 

மேலும் தற்போது ஆஸ்கார் தேர்வுகுழுவில் கலந்து கொள்ள நடிகர் சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்முலம் முதல்முறையாக ஆஸ்கார் தேர்வுகுழுவில் கலந்து கொள்ளும் முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார் நடிகர் சூர்யா.

 

இந்நிலையில் தற்போது இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, ஆஸ்கார் விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா அவர்களுக்கு எனது பாராட்டுகள்! வானமே எல்லை!”

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon