--- --:--:-- --

டீசல் போட 5 நாள் காத்திருந்த டிரைவர் – வண்டியிலேயே உயிரிழப்பு..!

3

டீசல் நிரப்புவதற்காக 5 நாட்களாக வரிசையில் காத்திருந்த லாரி ஓட்டுநர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது.

 

இதனால் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களில் நாள் கணக்கில் காத்திருந்து எரிபொருள் நிரப்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக காத்திருக்கும் வாகன ஓட்டிகள் அடிக்கடி மயங்கி விழுந்து அதிர வைக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

 

மேற்கு மாகாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 63 வயதான லாரி டிரைவர் ஒருவர் கடந்த 5 நாட்களாக டீசலுக்காக வரிசையில் காத்து இருந்தார். நேற்று அவர் தனது வண்டியில் ஆகிய உயிரிழந்து கிடந்தார். நீண்ட நேரம் வரிசையில் நின்றதால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon